பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக 7 ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி

Default Image

பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக வருகின்ற 7 ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இந்நிலையில், வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக 7.10.2020 முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1037 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva
Amit Shah - Tamilisai Soundararajan
Minister Ponmudi