ஆழியாறு அணையிலிருந்து 7-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி

Default Image

சென்னையில் உள்ள ஆழியாறு அணையிலிருந்து வருகின்ற 7-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை அ’ மண்டலத்தின் பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி பரம்பிக்குளம் ஆழியாறு ஓட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வோன் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம் சேத்துமடைக் கால்வாய் ‘அ’ மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ’ மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 7.10.2020 முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2548 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்