மக்கள் அதிகம் கூடும் பண்டிகை கால இடங்களை கண்காணிக்க உத்தரவு – சென்னை மாநகராட்சி!
மக்கள் அதிகம் கூடும் பண்டிகை கால இடங்களில் கண்காணிக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பரவி வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். ஆனால் இன்னும் முழுமையாக குறைந்து கொண்டே வருகிறது என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படவில்லை.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு தற்பொழுது வரையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அரசு சில தளர்வுகளை மக்களுக்கு அறிவித்து வருகிறது.
நவம்பர் டிசம்பர் ஆகிய 2 மாதங்களும் பண்டிகை காலம் என்பதால் கூடுதலாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என நேற்று பிரதமர் மோடி அவர்கள் தனது உரையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையிலும் பண்டிகை காலங்களில் மக்கள் அதிகமாக கூட கூடிய வணிக நிறுவனங்கள் போன்ற முக்கியமான இடங்களை கண்காணிக்க வேண்டும் எனவும், விதிமுறைகளை மீற கூடியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மறுக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.