கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க உத்தரவு.!
உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் செல்போனை சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவியின் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, 2 அறிக்கைகள் நீதீமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சிபிசிஐடி போலீசார் தரப்பு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மனுதாரருக்கு காண்பிக்க முடியாது என்று கூறி தான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், சிறப்பு புலனாய்வு பிரிவினர், மாணவி உபயோகப்படுத்திய செல்போனை விசாரணைக்காக கோரினர். அந்த செல்போன் கடந்த மாதம் வரையில் உபோயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளளது எனவும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து, மாணவியின் செல்போன் பெற்றோர்களிடம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதால், அதனை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறினர். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மாணவி உபயோகப்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.