முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

அதிமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை பரிசளித்து இருந்தார். இந்த கவசமானது மதுரை அண்ணா நகர் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும். ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தியின் போது அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கையெழுத்திட்டு கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து வந்து பசும்பொன்னார் சிலைக்கு அணிவித்து பின்னர் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும்.
அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் தான் தங்க கவசத்தை எடுத்து வருவார். ஆனால் கடந்த ஆண்டு அவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தேவர் தங்க கவசத்தை யார் எடுப்பது என்ற குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் அதிமுக சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். எனவே, கூறி தற்போது அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கிறார். அவரிடமே தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் தனக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரினர். ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதனை மறுத்து இன்று வழக்கை ஒத்திவைத்து இருந்தார். இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், முறைப்படி பொதுக்குழு கூட்டி பொதுக்குழு உறுப்பினர்களால் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் இருக்கிறார். எனவே தேவர் தங்க கவசத்தை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்தாண்டு இதே பிரச்சனை எழுந்த போது ராமநாதபுரம் வருவாய் அலுவலரிடம் தேவர் தங்க கவசம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025