இன்று மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை ஒப்படைக்க உத்தரவு

Default Image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை  இன்றைக்குள் ஒப்படைக்க உத்தரவு. 

10-ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா  காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 10-ம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனால், பல தரப்பினர் கொரோனா வைரஸ்  தமிழகம் முழுவதும் பரவி உள்ளபோது தேர்வு நடத்தக்கூடாது ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதுடன் அனைத்து மக்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

மேலும், மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப் பதிவேடு அடிப்படையில் 20 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிட அவர்களின் வருகைப் பதிவேட்டினை தலைமையாசிரியர்கள் இன்றைக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்