விவசாயிக்கு 4 வாரத்தில் கடன் வழங்க உத்தரவு!
விவசாய கடன் தர மறுக்கும் கூட்டுறவு வங்கி தலைவர், செயலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு.
ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயி சண்முகத்துக்கு 4 வாரத்தில் விவசாய கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. என்எம் மங்கலம் தொடக்க மேலாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கார்த்திக் செயலருக்கு எதிராக விவசாயி சண்முகம் வழக்கு தொடுத்திருந்தார். விவசாய கடன் தர மறுக்கும் கூட்டுறவு வங்கி தலைவர், செயலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி விவசாயி சண்முகம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்.
கூட்டுறவு வங்கியின் தலைவர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் செயல்படுகிறார் என மனுவில் குற்றசாட்டியுள்ளார். இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையின்போது, விவசாயி சண்முகத்துக்கு 4 வாரத்தில் விவசாய கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அணையிட்டுள்ளது.