#BREAKING: கல்குவாரியில் கடுமையான விதிமுறை பின்பற்ற உத்தரவு..!
நிபந்தனை இன்றி செயல்படும் குவாரிகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் கவலை அளிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி சூளகிரி அருகே இரண்டு கிராமங்களில் பள்ளி அருகே செயல்படும் குவாரிகளை கட்டுப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.குவாரிலிருந்து வெளியேறும் தூசி கலந்த நச்சுப் புகையால் குழந்தைகளின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் கல் குவாரிகளை அனுமதிக்கும் போது கடுமையான நிபந்தனைகளை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்குவாரிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா..? என்பதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தல். கல் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிபந்தனை இன்றி செயல்படும் குவாரிகளால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் கவலை அளிப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், குவாரிகளில் இருந்து வெளியேறும் புகையில் நச்சுத்தன்மை இருக்கிறதா என்பதையும் சோதனை செய்யவும், இந்த பிரச்சனை தொடர்பாக இரு கிராமங்களிலும் ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.