கொரோனா அதிகமுள்ள 11 மாவட்டங்களில் 21-ம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள் வழங்க உத்தரவு..!

Published by
murugan

நோய் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வரும் 21-ம் தேதி வரை உணவுப்பொட்டலங்கள் வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களது பசியினை போக்கும் விதமாகவும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும் நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரை நாள்தோறும் ஒரு இலட்சம் உணவு பொட்டலங்கள் திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன.

இதற்கான போதிய நிதி வசதி இல்லாத திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும் அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரை தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும் திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும் நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: Sekar Babu

Recent Posts

வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க மத்திய அரசு திணறி வருகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…

26 minutes ago

டி20 கிரிக்கெட் தொடரில் வரலாறு படைத்த வருண் சக்கரவர்த்தி!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…

32 minutes ago

STR50 : கைவிட்ட கமல்ஹாசன்…சிம்பு எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…

1 hour ago

முதல் பந்திலேயே சிக்ஸ்… டி20யில் ரெக்கார்ட் வைத்த சஞ்சு சாம்சன்.!

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…

2 hours ago

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…

2 hours ago

செய்தியாளர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் நடிகை.! இணையத்தை திக்குமுக்காட வைத்த வீடியோ…

அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…

3 hours ago