இந்த மாவட்டத்தில் வரும் 22- ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 22ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு.
கடந்த 2018-ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் வரும் 22-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 22ஆம் தேதி மூட மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.