சென்னையில் நாளை முதல் கறிக்கடைகள் செயல்படாது என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனால் நாடு முழுவதும் 144 தடை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் இந்தியாவில் தற்போது நிலவரப்படி 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது .ஆனால் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இறைச்சிக்கடைகளில் இறைச்சி வாங்கியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் சென்னையில் நாளை மறுநாள் கறிக்கடைகள் செயல்படாது என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தடையை மீறி இறைச்சி கடைகளை திறந்து வைத்திருந்தால் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…