அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

Excavation materials : தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா என்பவர் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த 2013 முதல் 2016 வரை மேற்கொண்டார். அப்போது, அகழாய்வு பணியில் 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்ததாக கூறப்பட்டது.

Read More – ஓபிஎஸ்க்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்!

இதுதொடர்பான அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் அவர் சமர்பித்திருந்தார். அதில், கீழடியின் கலாச்சாரம், நாகரீகம், விவசாயம் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். பின்னர் திடீரென தொல்லியல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அகழாய்வு பணிகளை மேற்கொண்டார்.

Read More – பிரதமரின் முகத்தில் தோல்வி பயம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

ஆனால், எதுவும் சொல்லும்படி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழலில், கடந்த 2016 ஆண்டு வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மத்திய தொல்லியல் துறையிடம் இருக்கும் கீழடியின் 2ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த 5000க்கு அதிகமான பழங்கால பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியிருந்தார்.

Read More – திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதி ஒதுக்கீடு!

இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்க பூர்வாலா மற்றும் நீதிபதி தனபால் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் சுமார் 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நாடைபெற்று வருகிறது என்றும் இதனை 9 மாதங்களில் வெளியிட உள்ளதாகவும் நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago