#breaking: ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் இன்று பிற்பகல் உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
சமீபத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது. அந்த பெண் எஸ்.பி, காவல்துறை டி.ஜி.பி, உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, 6 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதையடுத்து, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம். ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரித்து இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளார். காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.