பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை!தமிழக அரசு
தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., உள்துறை செயலாளர் மீது வழக்கு பதியக்கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் நபர்கள் கொண்ட கும்பல்.
இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.
மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.
பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
முதலில் பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற அடிப்படை தெரியாமல் போலீசார் புகார் அளித்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டனர்.
இந்த அரசாணையில், புகார் அளித்த பெண்ணின் விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டது.
இதனால் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் கோவை எஸ்பி பாண்டியராஜன் மற்றும் அரசாணை வெளியிட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இன்று இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
பின்னர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி., உள்துறை செயலாளர் மீது வழக்கு பதியக்கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.