மிக கனமழை!! தமிழ்நாட்டில் நாளை ஆரஞ்சு அலர்ட்! எங்கெல்லாம் தெரியுமா?
வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 7-ல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
தூத்துக்குடி கனமழை எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக, கலியாவூர் முதல் புன்னைக்காயல் வரை தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மின்சாதன பொருட்களை கவனமாக பயன்படுத்தவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழை பாதிப்பிலிருந்து மீண்டு வராத நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.