தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கி தொடங்கியுள்ள நிலையில், கேரளா, உள்தமிழகம், தெற்கு உள் கர்நாடகா, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடஙக்ளில் மிதமான மழை பெய்து வரும் சூழலில், தற்போது தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் நவம்பர் 3 வரை தமிழகத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த 3 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது.
மேலும், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்பு உள்ளளவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக்…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…