இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 14 மாவட்டங்களில் கனமழை..!
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் இந்த மூன்றுமாவட்டத்திற்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் நாளைக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வருகின்ற 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி 9-ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 10-ஆம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகம், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.