தொடங்கிய விருப்ப மனு ! மூத்த அமைச்சர்கள் எந்த தொகுதியில் போட்டி ?

அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.அதிமுகவில் விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்பமனு பெற்று பூர்த்தி செய்யலாம் என்றும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில், ரூ.15,000, புதுச்சேரியில் ரூ.5,000 மற்றும் கேரளாவில் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியும்,தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் போட்டியிட இன்று விருப்பமனு அளித்துள்ளனர். மேலும் அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியிலும்,அமைச்சர் செங்கோட்டையன் கோபி தொகுதியிலும், அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் தொகுதியிலும், அமைச்சர் வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025