ADMK Case MHC [File Image]
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன்படி, ஒரு மாத இடைவெளிக்கு பின் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, இபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது.
கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். திருத்துவதற்கும், தளர்த்துவதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான்.
ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை. கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மேல்முறையீட்டு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு செல்லும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த பிழையும் இல்லை. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தவறு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழங்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதத்தை முன்வைத்தார்.
இபிஎஸ் தரப்பு வாதங்களை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கப்படும் என்றும் பின் பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…