OPS : இன்று பிரதமர் நரேந்திர மோடி சேலத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த வருடத்தில் 6வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று கோவையில் ரோட் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டு இன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் (பாமக), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), டிடிவி தினகரன் (அமமுக ), ஓ.பன்னீர்செல்வம்(அதிமுகதொஉமீகு), ஜான் பாண்டியன், உள்ளிட்டோரும், அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன், சரத்குமார் , குஷ்பூ உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசி முடித்த பிறகு அடுத்ததாக ஓபிஎஸ்-ஐ பேச அழைக்கையில், அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என குறிப்பிட்டனர். அதன் பிறகு பேசிய ஓபிஎஸ், இந்த நாட்டின் தங்கமாக, சிங்கமாக பிரதமர் மோடி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக மாநில அரசுகளுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளார் என கூறி மீண்டும் மோடி பிரதமராக வருவார் என தனது பேச்சில் குறிப்பிட்டார் ஓபிஎஸ்.
அதிமுக சின்னத்தை, கொடியை , கட்சி பெயரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியாகி இருந்தது. அதில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை நிரந்தரமாக பயன்படுத்த கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…