ஜூலை 11 அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் மேல் முறையீடு செய்துள்ளார்.
தமிழக அரசியலில் மிக முக்கிய காட்சிகளில் ஒன்றாக இருக்கும் அதிமுக தற்போது இரு பிளவாக பிளவு பட்டு இருக்கிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு ஒரு புறம் இபிஎஸ் தரப்பு ஒருபுறம் என இருவரும் கட்சி பிரச்னையை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்
இதனை எதிர்த்து முதலில் ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. அதில் ஒற்றை நீதிபதி தலைமை ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும், அதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு செய்த மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என வெவ்வேறு தீர்ப்புகளை அளித்தனர்.
இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே மேல்முறையீடு செய்துள்ளது. இதனை இன்று ஓபிஎஸ் ஆதரவாளரான அதிமுக உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என வெளியான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையில், இபிஎஸ் தரப்பு இந்த வழக்கை விசாரிக்கையில் தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என கேவியேட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…