இரட்டை இலை சின்னம் கிடைக்காத காரணத்தால் கர்நாடக தேர்தலில் இருந்து விளக்குகிறோம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ஆம் தேதி 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கர்நாடகாவில் அதிமுக ஏற்கனவே பல முறை போட்டியிட்ட காரணத்தால் இந்த முறையும் போட்டியிட வேலைகளை ஆரம்பித்து.
அதில் ஏற்கனவே தமிழகத்தில் நடந்தது, போல இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு பிரிவுகளாக தேர்தல் களத்தில் களமிறங்கின. இதில் புலிகேசி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் அன்பரசன் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரையும், கோலார் தங்கவயல் பகுதியில் ஆனந்த்ராஜ் என்பவரையும் களமிறக்கியது. அந்த தொகுதிகளில் இபிஎஸ் எந்த வேட்பாளரையும் களமிறக்கவில்லை. இதில் கோலார் தங்கவயல் பகுதியில் ஆனந்த்ராஜ் வேட்புமனு சுயேச்சை வேட்புமனுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளர் என குறிப்பிட்டதால் அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து தங்கள் தரப்பு வேட்பாளர்கள் மற்றும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், கர்நாடகாவில் 2018ஆம் ஆண்டே இரட்டை இலை சின்னம் அதிமுக வசமிருந்து சென்று விட்டது. அதனால், அப்போதைய தேர்தலில் சுமார் 500 வாக்குகள் மட்டுமே பெற்றோம். தற்போதும் அதே போல இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்பதால், மீண்டும் அதே போல ஒரு தோல்வி வேண்டாம் எனவும் , அதிமுகவின் பெயர் பாதிக்கப்படும் என கூறி தங்கள் தரப்பு வேட்பாளர்களான குமார் மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோர் வாபஸ் பெற உள்ளனர் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…