ஓபிஎஸ் மகனிற்கு அமைச்சரைவியில் இடம் தருவது பற்றி பிரதமர் முடிவுவெடுப்பார்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் ஜெயித்துள்ளதால் பாஜக அமைச்சரவையில் இடம்பெறுமா என பாஜக தமிழக தலைவர் தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், ‘பாஜக அமைச்சரவையில் ரவீந்திரநாத் இடம்பெறுவது குறித்து பிரதமர் மோடிதான் முடிவெடுப்பார் என கூறினார்.’ அதேபோல ரவீந்திரநாத்திடம் கேட்டபோது, ‘ எனக்கு மந்திரிசபையில் இடம் பிடிப்பது பற்றி எனக்கு ஆசையில்லை’ என குறிப்பிட்டார்..
DINASUVADU