2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, அதிமுக இரு அணிகளாக பிரிந்தன. இதன்பின், கடந்த ஆண்டு ஜூலை மாத பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு உள்கட்சி தேர்தல் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார்.
இபிஎஸ் இடைக்கால பொதுசெயலாளராக அறிவிக்கப்படும் சமயத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே தீர்ப்பு சாதகமாக அமைந்தது. அதே வேளையில், அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது.
4000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால்.. எந்த பயனும் இல்லை.! இபிஎஸ் கடும் விமர்சனம்.!
இந்த சூழலில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், அதிமுக பெயர் அடங்கிய லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதனை குறிப்பிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுக தொடர்புடையதை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது.
இதுபோன்ற செயல் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என்னை அதிமுக பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. இந்த சமயத்தில் ஓபிஎஸ், அதிமுக சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு முன்பு நடந்த விசாரணையில் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி!
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. அதாவது, உயர்நீதிமன்றத்தின் மறுஉத்தரவு வரும் வரை இவற்றை பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவர எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் -க்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…