ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு.
சென்னையில் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று பெரும்பாலான நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதில், நத்தம் விஸ்வநாதன் மட்டுமின்றி பெரும்பாலான நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கக்கூடாது என தெரிவித்தாக கூறப்படுகிறது. பொருட்களில் போலி இருப்பது போன்று அரசியலில் போலி பன்னீர்செல்வம் என நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
எனவே, ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலையும் பழனிசாமி தலைமையில் எதிர்கொள்ள தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்களை மீண்டும் இணைக்கக்கூடாது என்றும் போனர்வகள் போனவர்களாக இருக்கட்டும் என்றும் பழையன கழிந்தால் தான் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில் கூறியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…