சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்..!
இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் நடைபெற்றது. முதல் நாள் ஆளுநர் அரசு தயாரித்த உரையை படிக்காமல் இரண்டு நிமிடத்தில் தனது உரையை முடித்துக் கொண்டார். பின்னர் சபாநாயகர் அப்பாவு அரசின் உரையை தமிழாக்கம் செய்து வாசித்தார். பின்னர் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டு அலுவலகக் கூட்டம் நடைபெற்றது.
இந்த அலுவலக கூட்டத்தில் வருகின்ற 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரண்டாம் நாள் சட்டப்பேரவை தொடங்கியது. சட்டப்பேரவை தொடங்கியதும் விஜயகாந்த் உள்ளிட்ட மறைந்த முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மௌனம் கடைப்பிடித்தனர். நேற்று ஆளுநர் உரை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
இன்று 3-ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமார் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மகன் போனாலும்… இத்தனை மகன், மகள் இருக்கிறார்கள்… கலங்கிய சைதை துரைசாமி.
நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை பரிசீலனை செய்யும்படி சபாநாயகரிடம் கேட்டு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் உத்தரவை அடுத்து சட்டப்பேரவை ஓபிஎஸ் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கைக்கு அருகில் ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் 206-ம் எண் இருக்கையில் இருந்து 207-ம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தான் நாங்கள் எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்வு செய்துள்ளோம். அதை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.