சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை குறித்து இன்று சபாநாயகர் அப்பாவு பரிசீலனை.
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இக்கடிதம் குறித்து சபாநாயகர் கூறுகையில், கடிதத்தை படித்த பின் இதுகுறித்து யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் உரிய நேரத்தில் முடிவு எடுப்பேன் என தெரிவித்தார். இந்த நிலையில், வரும் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ளது.
சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்து இருக்கையில்தான் இதுவரை ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். தற்போது இருவருக்கு இடையே மோதல் நிலவுவதால், சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை குறித்து இன்று சபாநாயகர் அப்பாவு பரிசீலனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…