மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் 21-ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
சசிகலா தான் பார்த்துக்கொண்டார்:
அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆஜராகினார்.இவரிடம் 10:30 – 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது.
அப்போது,”அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது.
மேலும்,2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது மன உளைச்சலுடன் இருந்தார்.2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவரது உடல்நலக்குறைவுடன் இருந்தார் எனவும் இளவரசி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்:
இதனிடையே,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார்.அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தி வந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகினார்.
இதைத் தவிர எனக்கு வேறு ஏதும் தெரியாது:
இந்நிலையில்,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்று ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணையில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
மேலும்,2016 ஆம் ஆண்டு செப்.22 ஆம் தேதி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது,அந்த சமயத்தில் தான் சொந்த ஊரில் இருந்ததாகவும்,உதவியாளரின் மூலம்தான் இந்த தகவல் கிடைத்ததாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்கவில்லை:
அதன்பின்னரே,அடுத்த நாள் சென்னை வந்து மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த தலைமைச்செயலாளரிடம் விவரங்களை கேட்டதாகவும், மேலும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்,மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்ததாகவும்,அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்களின் எண்ணம்:
ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.துணை முதல்வர் என்ற முறையில் ஆணையத்தின் கோப்பில் தான் கையெழுத்திட்டதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது.
மேலும்,”மருத்துவமனையில் காவிரி விவகாரம் குறித்து ஜெயலலிதா நடத்திய ஆலோசனை கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.இது தொடர்பாக அறிக்கை வந்த பின்பே, அக்கூட்டம் குறித்து எனக்கு தெரிய வந்தது,ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விஜய பாஸ்கரிடம் தான் கேட்டறிந்தேன்”,என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இடைவேளை:
இந்நிலையில்,இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.இடைவேளைக்கு பின்னர் 3 மணியளவில் அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.இந்த விசாரணைக்கு பின்னரே முழு தகவல் தெரிய வரும்.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…