ஆன்மிக பக்தர்கள் மத்தியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் மருஉருவமாக பார்க்கப்படும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல், பிரதமர் நரேந்திர மோடி வரையில் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் .
முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையிலேயே நேரில் வந்து பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். அதே போல மற்ற சில அமைச்சர்களும் , அரசியல் தலைவர்களும் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆண்களுக்கு சபரிமலை… பெண்களுக்கு மேல்மருவத்தூர்… பங்காரு அடிகளாரின் ஆன்மீக நகர்வுகள்.!
பங்காரு அடிகளார் உடலானது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் பொதுமக்கள் திரளானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக வி.கே.சசிகலா , பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் வந்து தனது அஞ்சலியை செலுத்தினார். அதன் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தனது இரங்கலை நேரில் வந்து செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதிபராசக்தி தொண்டு பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும், பங்காரு அடிகளாரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
இன்று மாலை பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆன்மிகம் மற்றும் கல்வி சேவைகாக கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…