ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்

ops

15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இன்றும் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில், போக்குவரத்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால தாமதம் செய்யாமல், போக்குவரத்து ஊழியர்களுடன் சுமூகமாக பேசி, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊதியக் குழு பேச்சுவார்த்தை, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தற்போது மேற்கொண்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 60 விழுக்காடு பேருந்துகள் இயங்கவில்லை.

2வது நாளாக வேலை நிறுத்தம்…! 30% போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ வழங்க நடவடிக்கை!

இதன் விளைவாக, பள்ளி செல்லும் குழந்தைகள், முதியோர், பெண்கள், அலுவலகம் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகளில் ஏற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலை பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும்.

உள்ளூர் பேருந்துகளில் இந்த நிலைமை என்றால், வெளியூர் பேருந்துகளில் நிலைமை வேறாக உள்ளது. பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு 12-01-2024 முதல் பேருந்துகளில் பயணம் செய்ய பொதுமக்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போதே 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை கூடுதல் கட்டண உயர்வு வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஒருவேளை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வேலை நிறுத்தம் நீடித்தால், பேருந்துக் கட்டணம் என்பது விமானக் கட்டணத்தைவிட உயரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே, அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்