அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு – ஓபிஎஸ் வலியுறுத்தல்

o panneerselvam

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் பணம் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதுவும், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா இல்லா அட்டைதாரர்கள், தவிர அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளினை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இந்த நடைமுறைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு – தமிழக அரசு அறிவிப்பு

அதாவது, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்?, தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை நடுவு நிலைமைக்கு எதிரான செயலாகும். பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து இருப்பது மக்களிடையே
பாரபட்சத்தை ஏற்படுத்துவது போல் உள்ளது. சலுகைகளை பறிக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டு இருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது, இது கண்டிக்கத்தக்கது.  எனவே, 1,000 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசினை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்