அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டி! தேர்தல் ஆணையத்திடம் மனு
OPS: அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதிமுக-வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Read More – மக்களவை தேர்தல்: அதிரடி திருப்பம்..! பாஜக – பாமக கூட்டணி உறுதி
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்திர தடைவிதிக்கப்பட்டது.
Read More – தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை! தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
இந்த நிலையில் அதிமுக கட்சி சார்பாக Form A மற்றும் B படிவங்களில் கையெழுத்திட்டு இரட்டை இலைச் சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை தனக்கு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார், இதை செய்யாத பட்சத்தில் அதிமுக (OPS) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் நிற்க அனுமதிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.