துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 12ம் தேதி தேனி மாவட்டம் போடிநாயக்கனுரில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, தாக்கல் செய்த வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ்-ஸின் சொத்து மதிப்பு விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து 2016ல் ரூ.55 லட்சமாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் ரூ.5.19 கோடியாக உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் அசையும் சொத்து 843% உயர்ந்துள்ளது. இதுபோன்று அசையா சொத்து 5 ஆண்டில் 169% உயர்த்திருப்பது அவர் தாக்கல் செய்திருக்கும் வேட்புமனுவின் மூலமாக தெரியவந்துள்ளது.
துணை முதல்வரின் அசையா சொத்து 2016ல் ரூ.98 லட்சமாக இருந்துள்ளது. 2021ம் ஆண்டில் ரூ.2.64 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் அளவும் 988% அதிகரித்துள்ளது. கடந்த 2016ல் கடன் ரூ.25 லட்சகமாக இருந்த நிலையில், 2021ல் ரூ.2.72 லட்சம் என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். துணை முதல்வரின் அசையும் சொத்து, அசையா சொத்து இரண்டுமே பலமடங்கு உயர்த்திருப்பது அவரது வேட்புமனுவின் மூலமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…