தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காரில் இருந்து தேசிய கொடியை அகற்றிவிட்டதாகவும் அரசு காருக்கு பதிலாக சொந்த காரையே பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக செயற்குழு அண்மையில் நடந்தது இக்கூட்டத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே வெளிப்படையாக வார்த்தை மோதல்கள் காரசாரமாக நடந்தது.
மேலும் கூட்டத்தில் 2021 முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அதிமுவை வலம் வந்த நிலையில் ஓபிஎஸ் முதல்வர் அடம்பிடித்து வருவதாகவும் ஆனால் அதிமுகவில் பெரும்பான்மையோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்து வருவதால் இரட்டை இலைக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் நினைத்தது போன்ற ஆதரவு அவருக்கு கிடைக்காததால் கடும் அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் உள்ளார்.இந்நிலையில் அக்டோபர் 7ந் தேதி முதல்வர் வேட்பாளரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவிப்பார்களா? என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் நேற்று தமது ஆதரவாளர்கள் சிலருடன் அவருடைய வீட்டில் ஆலோசனை நடத்தி உள்ளார்.
மேலும் முதல்வர் இபிஎஸ்னுடனான அனைத்து நிகழ்ச்சிகளையும் தற்போது ஓபிஎஸ் புறக்கணித்து வருகிறார். மறுபக்கம் மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிதீவிர ஆலோசனையையும் நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைகள் பகலை தாண்டி இரவிலும் நீடித்தது வருகிறது. இந்நிலையில்தான் ஓபிஎஸ் தன்னுடைய காரில் இருந்து தேசிய கொடியை அகற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அரசு காரை பயன்படுத்தாமல் தனது சொந்த காரையே ஓபிஎஸ் பயன்படுத்தும் முடிவில் இருக்கிறர் என்ற மற்றொரு தகவலும் வெளியாகி வருகிறது.
அதே போல் சென்னை மாநகராட்சியின் இன்றைய திட்டம் தொடக்க விழா அழைப்பிதழில் துணை முதலமைச்சர் பெயர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சூழலில் இரட்டை இலையின் பிளவு தொடர்வதால் அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளதாகவும் ஆக்.7 அதிமுக சார்பில் வெளியாகும் அந்த ஒரு முக்கிய முடிவு இவற்றிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்குமா? என்று அரசியல் விமர்சகர்கள் நோக்குகின்றனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…