மூவர்ணக்கொடி காரில் அகற்றம்:ஒரங்கட்டப்படுகிறாரா..? இல்லை ஒதுங்கி கொள்கிறாரா..?? ஓபிஎஸ்

Default Image

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காரில் இருந்து தேசிய கொடியை அகற்றிவிட்டதாகவும் அரசு காருக்கு பதிலாக சொந்த காரையே பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக செயற்குழு அண்மையில் நடந்தது இக்கூட்டத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே வெளிப்படையாக வார்த்தை மோதல்கள் காரசாரமாக நடந்தது.

மேலும் கூட்டத்தில் 2021 முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அதிமுவை வலம் வந்த நிலையில் ஓபிஎஸ் முதல்வர் அடம்பிடித்து வருவதாகவும் ஆனால் அதிமுகவில் பெரும்பான்மையோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்து வருவதால் இரட்டை இலைக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் நினைத்தது போன்ற ஆதரவு அவருக்கு கிடைக்காததால் கடும் அதிருப்தியிலும் அதிர்ச்சியிலும் உள்ளார்.இந்நிலையில் அக்டோபர் 7ந் தேதி முதல்வர் வேட்பாளரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவிப்பார்களா? என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் நேற்று தமது ஆதரவாளர்கள் சிலருடன்  அவருடைய வீட்டில் ஆலோசனை நடத்தி உள்ளார்.

மேலும் முதல்வர் இபிஎஸ்னுடனான அனைத்து நிகழ்ச்சிகளையும் தற்போது ஓபிஎஸ் புறக்கணித்து வருகிறார். மறுபக்கம் மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிதீவிர ஆலோசனையையும் நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைகள் பகலை தாண்டி இரவிலும் நீடித்தது வருகிறது. இந்நிலையில்தான் ஓபிஎஸ் தன்னுடைய காரில் இருந்து தேசிய கொடியை அகற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் அரசு காரை பயன்படுத்தாமல் தனது சொந்த காரையே ஓபிஎஸ் பயன்படுத்தும் முடிவில் இருக்கிறர் என்ற மற்றொரு தகவலும் வெளியாகி வருகிறது.

அதே போல் சென்னை மாநகராட்சியின் இன்றைய திட்டம் தொடக்க விழா அழைப்பிதழில் துணை முதலமைச்சர் பெயர்  இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சூழலில் இரட்டை இலையின் பிளவு தொடர்வதால் அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளதாகவும் ஆக்.7  அதிமுக சார்பில் வெளியாகும் அந்த ஒரு முக்கிய முடிவு இவற்றிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்குமா? என்று அரசியல் விமர்சகர்கள் நோக்குகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்