ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! ஜான் பாண்டியன் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம்.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஜான் பாண்டியன் இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்து பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி தமமுக ஜான்பாண்டியனை இபிஎஸ் அணியினர் சந்தித்து பேசினர். அதை தொடர்ந்து, ஜான் பாண்டியன் அவர்கள் கூறுகையில், அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் பாஜக போட்டியிட வாய்ப்பில்லை. இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கு என்னுடைய ஆதரவு இருக்கும். என கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜான் பாண்டியன் இல்லத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். இடைத்தேர்தல் ஆதரவு குறித்து ஜான் பாண்டியனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.