அதிமுகவின் உப்பை தின்று வளர்ந்து அந்த வீட்டிற்கே துரோகம் செய்கிறார் ஓபிஎஸ் – ஜெயக்குமார்
ஓபிஎஸ் அதிமுகவின் உப்பை தின்று வளர்ந்து அந்த வீட்டிற்கே துரோகம் செய்து வருகிறார் என ஜெயக்குமார் பேட்டி.
கும்மிடிப்பூண்டியில் கட்சி நிர்வாகி ஒருவரின் புதுமனை புகுவிழா நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ஜெயலல்லதாவால் அடையலாம் காட்டப்பட்டு ஓபிஎஸ் முதல்வரானார். அதிமுகவின் உப்பை தின்று வளர்ந்து அந்த வீட்டிற்கே துரோகம் செய்து வருகிறார். ஓபிஎஸ் தொடங்கியுள்ளது தர்மயுத்தம் அல்ல, அவர் தொடங்கியுள்ளது கர்ம யுத்தம். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ் என தெரிவித்துள்ளார்.