கடந்த, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு மீது, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்களும், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. அரசுக்கு எதிராக ஓட்டளித்த, எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஒபிஎஸ் தலைமையிலான அணியினரும்,இபிஎஸ் தலைமையிலான அணியினரும் மீண்டும் ஒன்றிணைந்து, ஒரே அ.தி.மு.க.,வாக செயல்பட்டனர். பன்னீர்செல்வம் துணை முதல்வரானார். இதையடுத்து, அரசுக்கு எதிராக ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதீமன்ற நீதிபதிகள், சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, என தீர்ப்பளித்தனர். இதனை எதிர்த்து, திமுக தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், அரசுக்கு எதராக ஓட்டளித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏற்கனவே கொரோனா, டிஎன்பிஸ்சி,குடியுரிமை என புயலை கிழப்ப காத்திருந்த எதிர்கட்சியினருக்கு இந்த தீர்ப்பு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…