பண்ருட்டி ராமச்சந்திரன்மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை.
திமுக அரசுக்கு எதிராக ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சொத்து வரி, பால்விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் கட்சி கூட்டம் அல்ல என விமர்சித்துள்ளார்.
ஓபிஎஸ் நடத்தும் கம்பெனியில் இயக்குநர்கள் குழு கூட்டம்தான் நடந்து கொண்டிருக்கிறது. மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன் ஏன் இப்படி மாறிவிட்டார் என்று தெரியவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன்மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அதை அவர் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூடா நட்பு கேடாய் முடியும் என பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடைய, சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…