ஓபிஎஸ் இனி வெறும் அட்டை கத்திதான்! – ஜெயக்குமார்
ஓ.பி.எஸ்,டிடிவி தினகரன், சசிகலா இவர்களை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணையலாம் என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2022, ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கவுரவர்களின் சூழ்ச்சி தோல்வியடைந்துள்ளது பாண்டவர்களுக்கே இறுதியில் வெற்றி. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பின் மூலம் ஓபிஎஸ்க்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துவிட்டது.
ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் ஜீரோதான்
அரசியலில் இனி ஓபிஎஸ்ஸின் எதிர்காலம் ஜீரோதான். ஓபிஎஸ் தலைமையிலான குழு இனி வெறும் அட்டை கத்திதான் என விமர்சித்துள்ளார். மேலும், ஓ.பி.எஸ்,டிடிவி தினகரன், சசிகலா இவர்களை தவிர யார் வந்தாலும் அதிமுகவில் இணையலாம். ஈரோடு கிழக்கு இடைதேர்த்லில் மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என தெரிவித்துளளார்.