அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி சசிகலா ஓய்வில் இருக்கிறார். பிப் 24ஆம் தேதி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலுள்ள அம்மா திருவுருவப் படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்துவார். அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்கும், திமுகவுக்கும் எதிரான வாக்குகள் அமமுகவிற்கு கிடைக்கும் என்றும் அதன் மூலம் அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைப்போம் எனவும் கூறியுள்ளார். திமுக மீதான அச்சம் மக்கள் மத்தியில் தற்போதும் உள்ளது, அது வாக்காக அமமுகவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மதுரையில் கருணாநிதி சிலையை வைக்க பெருந்தன்மையாக அனுமதி அளித்துள்ளதாக உதயகுமார் பேசுகிறார். இப்போது யார் திமுகவின் பி டீம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வேதியியல் மாற்றம் ஏற்பட்டு வருவதால் ஆட்சியாளர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அமமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இதுவரை யாரும் பேசவில்லை என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தார். சுதாகரனுக்கு அபராத தொகை செலுத்த பணம் இல்லை என்றும் அதனால்தான் காத்துக்கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். ஓபிஎஸ் பரதனாக இருந்தது உண்மைதான், அந்த பரதன் (ஓபிஎஸ்) தவறான முடிவெடுத்து இன்று மோசமான நிலையில் உள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராவணனுடன் சேர்ந்ததால், இன்றைக்கு இதுபோன்ற நிலைமையில் இருக்கிறார். பரதன், ராமர் கூட இருக்க வேண்டியவர், ராவணனுடன் சேர்ந்துவிட்டார் என்று தான் நான் சொன்னேன் என கூறியுள்ளார். ஓபிஎஸ் நிச்சயம் மன உளைச்சலில் இருக்கிறார் என்று எனக்கு தெரியும். சசிகலா அணிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்தால் நிச்சயம் வரவேற்பேன். பரதன் ஆகிவிட்டார் என்று நினைத்துக் கொள்வேன் என செய்தியாளர் கேள்விக்கு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…