திருச்சி மாநாட்டில் சசிகலாவுக்கு அழைப்பு.? ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி…
வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள திருச்சி மாநாட்டில் சசிகலா, டிடிவி தினகரன், அதிமுக கட்சி தொண்டர்கள் வருகை தர இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சென்னை: சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், தொண்டர்கள்தான் அதிமுக பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை, இன்று அதிமுக ஒரு அரசியல் மாயையில் சிக்கியுள்ளது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
வரும் 24ம் தேதி மாநாடு:
அதிமுகவில் பிளவுகள் ஏற்பட்ட போதெல்லாம் சரியான தீர்ப்பை மக்கள் தான் வழங்கினார்கள். இந்நிலையில், அதிமுக பிரச்சனைக்கு முடிவு காண மக்களிடம் செல்ல இருக்கிறோம், வரும் 24ம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெற இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சசிகலாவுக்கு அழைப்பு – ஓ.பி.எஸ் சூசக பதில்
இன்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள், அதிமுக 51-வது ஆண்டு விழா ஆகியவற்றை சேர்த்து திருச்சியில் மாநாட்டுடன் முப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் சசிகலா, கேசி பழனிசாமி உட்பட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும். மேலும், அவர்கள் யாரும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், அவர்கள் அதிமுகவின் மூத்த முன்னோடிகள் என சூசக பதிலை அளித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். வரும் 24ம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி மாநாட்டில் என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்து முறையான விளக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுவார்.