அதிமுக என்ற பெயரை கூட பயன்படுத்த ஓபிஎஸ் தரப்புக்கு உரிமையில்லை – ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் முன்னிட்டு அதிமுக கொடியை அதிமுக என்ற பெயரையோ பயன்படுத்தக் கூடாது என ஜெயக்குமார் பேட்டி.
ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தாக எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக பொதுச்செயலாளராக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் தேர்வினை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் முன்னிட்டு அதிமுக கொடியை அதிமுக என்ற பெயரையோ பயன்படுத்தக் கூடாது. போஸ்டரில் கூட அதிமுக என்ற பெயர் கட்சியின் சின்னம் கட்சியின் கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. அந்த உத்தரவை எல்லாம் மீறி சட்டத்தை நாங்கள் மதிக்க மாட்டோம் சட்டம் என்ன செய்யும் என்ற வகையில் தான்தோன்றித்தனமாக ஓபிஎஸ் மற்றும் தரப்பினர் கட்சியின் கொடி சின்னம் பெயர் போன்றவற்றை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வேண்டுமென்றே சட்ட ஒழுங்கை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓபிஎஸ் தரப்பினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.