ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.! புதிய நீதிக்கட்சி தலைவரை சந்தித்த ஓபிஎஸ்.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து புதிய நீதிகட்சி தலைவரை சந்தித்துள்ளார் ஓபிஎஸ்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிரதான கட்சிகள் தங்கள் கட்சி நிலைப்பாடு, கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில், அடுத்தகட்ட நகர்வில் இருக்கின்றனர்.
இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகத்தை ஜி.என்செட்டி சாலையில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு குறித்து கலந்தாலோசித்து வருகிறார்.