தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை உருவாக்க அதற்கான பயணம் தொடரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டி.
தஞ்சையில் மருது சகோதர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியான கருத்து தான். ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக பேசுபவர்.
அவர், சரியான கருத்தை தான் கூறியுள்ளார். மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார். அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு. இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அமமுக உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை உருவாக்க அதற்கான பயணம் தொடரும் என்றும் இந்த முயற்சியை எங்களது இறுதி மூச்சு உள்ளவரை தொடர்வோம் எனவும் தெரிவித்த டிடிவி, அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம் என்றார்.
இதனிடையே, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதி முக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…