குரங்கணி காட்டுத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம்!

Default Image

குரங்கணி காட்டுத் தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்  என  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

21 பேர்  தேனி குரங்கணி தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அவர்களில்,சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பூஜா குப்தா, சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சகானா, சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மோனிஷா,சென்னை முடிச்சூரைச் சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் வட பழனியைச் சேர்ந்த நிவேதா ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த அனுநித்யா 30 சதவிகித தீ காயங்களுடனும், போரூரைச் சேர்ந்த இலக்கியா 40 சதவிகித தீ காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பூரைச் சேர்ந்த, சாஜனா, நேகா, பாவனா, ராஜசேகர் ஆகியோரும் சிறிய காயங்களுடம் மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஈரோட்டைச் சேர்ந்த பிரபு, கவிதா சுப்ரமணியன் ஆகியோரும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த கவிதா,கண்ணன், சென்னையைச் சேர்ந்த நிஷா, சேலத்தைச் சேர்ந்த தேவி உள்ளிட்டோரும் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்  என  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்