ஓபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்; தீர்ப்பு வெளியாவதில் தாமதம்.!
அதிமுக தொடர்பான வழக்குகளில், ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்வதால் தீர்ப்பு வெளியாவதில் தாமதம்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு தாமதமாக வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 22ஆம் தேதி இதற்காக விடுமுறை தினத்தில் விசாரணையின் இரு தரப்பு விவாதங்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று ஓபிஎஸ் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உள்ளார்.
இதனால் இந்த வாதத்தையும் விசாரித்து விட்டு தீர்ப்பு வெளியாகலாம் என்றும், மேலும் இன்றைய நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பான பட்டியலில், இன்று அதிமுக தொடர்பான வழக்குகள் ஏதும் பட்டியலிடப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது, இதனால் தீர்ப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.