ஓபிஎஸ் காலாவதியான மாத்திரை, எதற்கும் உதவாதவர்..! – வைகை செல்வன்
ஓபிஎஸ் காலாவதியான மாத்திரை, எதற்கும் உதவாதவர் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வம் விமர்சனம்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வம் அவர்கள் எம்.ஜி.ஆர்-ரின் 106-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் அவர்களை விமர்சித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ஓபிஎஸ் நான்கு பேரை வைத்துக் கொண்டு நாங்கள் தான் அதிமுக என கூறுகிறார். அவருக்கு இப்படி சொல்ல வெட்கமா இல்ல? ஓபிஎஸ் காலாவதியான மாத்திரை, எதற்கும் உதவாதவர். திமுக என்ற ஓடாத வண்டியை அதிமுகவில் இருந்து திமுகவிற்குச் சென்ற 8 அமைச்சர்கள் தான் தற்போது ஓட வைத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.