சென்னை:மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் சுற்றுப்பயணம்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையினால் தமிழகத்தில் இல்ல பல பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார்.
அதே வேளையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை, நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இந்நிலையில்,டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை(16.11.2021) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோர் அந்தந்த மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளனர்.அதன்படி,
2. சிதம்பரம் தொகுதி – பூவாளை – பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.
3. சீர்காழி தொகுதி – எருக்கூர்
4. பூம்புகார் தொகுதி – தரங்கம்பாடி
பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.
5.கீழ்வேலூர் தொகுதி – திருக்குவளை கருங்கண்ணியில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
திருத்துறைபூண்டி தொகுதி
6) ராயநல்லூர் கோட்டகம்
7) புழுதிகுடி சிதம்பரம் கோட்டகம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.
பட்டுக்கோட்டை தொகுதி:
8) சொக்கநாவூர் புலியகுடி பாதிக்கப்பட்ட இடங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவார்கள் என்று அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…