பிரதமர் மோடி ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ சந்திப்பாரா என சந்தேகம்.!
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி சந்திப்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை பிரதமர் மோடி சென்னை வருகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், சென்னை வரும் பிரதமர் மோடியை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமரை தனித்தனியே சந்திக்க இருவரும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும், பிரதமர் மோடி இருவரையும் சந்திப்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி இடையே சலசலப்பு தொடரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. அப்படி இபிஎஸ் சந்தித்தால், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவிப்பார் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் தகவல் கூறப்படுகிறது.
இதுபோன்று, பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருப்பதாகவும் சொல்லப்டுகிறது. அதிமுக விவகாரம் குறித்து பிரதமர் உடனான சந்திப்பில் ஓபிஎஸ் பேசுவார் என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் பிரதமர் தரப்பில் சந்திப்புக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், பிரதமர் மோடி இருவரையும் சந்திப்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது.